இந்த வீடியோவில் தரையில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதைப் பார்த்த குரங்கு ஒன்று அதனை அடைக்க முயற்சிக்கிறது. ஆனால் முடியவில்லை.
விலங்குகளுக்கு இதுபோன்ற புத்திசாலித்தனமும் அறிவும் இருக்கும்போது நம்மைப் போன்ற மனிதர்களுக்கு ஏன் இதுபோன்ற சிந்தனை உதிப்பதில்லை என்று வீடியோவைப் பகிர்ந்த சமூகவலைத்தளவாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தண்ணீரின் அவசியம் விலங்குகளுக்கு தெரியும்போது, மனிதர்களாகிய நமக்கு ஏன் தெரியவில்லை. இனி வரும் காலங்களிலாவது தண்ணீரை சேமிக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் எனவும், இந்த காணொளி மூலம் விலங்களிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்று கூறி ஏராளமானோர் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.