ETV Bharat / bharat

'அரசின் பணம் திருடப்பட்டுள்ளது'- ரஃபேல் குறித்து ராகுல்! - ரஃபேல் விமானம்

டெல்லி: ரஃபேல் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புதிய தாக்குதலை தொடுத்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Aug 22, 2020, 5:35 PM IST

ரஃபேல் விமானத்தை வாங்க மத்திய அரசு, அரசின் கருவூலத்திலிருந்து பணத்தை திருடியுள்ளது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், "பாதைகள் பல இருந்தாலும், உண்மை ஒன்றுதான்" என்ற மகாத்மா காந்தியின் வார்த்தையையும் மேற்கோள்காட்டி அவர் இந்தக் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து 2016ஆம் ஆண்டு, ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் நோக்கில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐந்து ரஃபேல் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா வந்தடைந்தது.

இதையும் படிங்க: எதிரிகளை அச்சுறுத்தும் புதிய ஆயுதம் ரஃபேல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.