இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பதிவு செய்வதற்கான தொடக்கவிழா புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் அகில இந்திய செயலர் புதுச்சேரி பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்ட மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், “இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற நிலையை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
இருவேறு கருத்து ஏற்பட்டதால் மத்திய அரசு முடிவு எடுக்க துணை நிலை ஆளுநர் கோப்புகளை அனுப்பினார். அதனைத் தொடர்ந்து ஒற்றை அவியல் இலவச அரிசி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சந்தித்து வலியுறுத்தினோம்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் குடியரசு தலைவர் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்தது. அது இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க வேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் உத்தரவு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவை ஏற்று கொண்டுள்ளார்கள். ஆனால், எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் மாநில அரசின் கொள்கை, பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பதுதான்.
பின்பு முழுமையான தீர்ப்பு வந்த பின்னர் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசு குடியரசு தலைவர் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்ட பின்னரும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது குடியரசுத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது அல்ல.
அப்போது பேசிய அவர் இன்று எனக்கு துக்கமான நாள். இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இலவச அரிசி வழங்குவது தான் அரசின் கொள்கை” என்றார்.
இதையும் படியுங்கள்: மருத்துவர்களின் அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கு - பதிலளிக்க உத்தரவு..!