கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடும்கண்டத்தில் ஹைடெக் திருடர்களின் கைவரிசையில் 100க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்துள்ளனர்.
ஷாப்பிங் செயலியான அமேசான் போலவே லோகோ, பெயரை வைத்துக்கொண்டு தத்ரூபமாக போலி செயலியை திருட்டு கும்பல் தயாரித்துள்ளது. அதை உண்மை என நம்பிய சிலர், பதிவிறக்கம் செய்துள்ளனர். பின்னர் அச்செயலியிலிருந்த விளம்பரத்தில், உங்களின் பணத்தை டபுள் ஆக்கும் அமேசானின் புதிய திட்டம் என்று கூறி, அதற்காக OMG Burse என்ற இணையதளத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அது குறித்து கிடைத்த தகவலின்படி, அதில் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என்றம், அப்படி செய்தால் உங்களின் பணம் இரட்டிப்பாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை நம்பிய வாடிக்கையாளர்கள், ரூ. 50 முதல் 2 ஆயிரம் வரை தினந்தோறும் டெபாசிட் செய்துள்ளனர். சில நாள்கள் கழித்து தான், அந்த செயலி போலியானது என வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது.
ஆரம்பத்தில் பணம் இரட்டிப்பானதால், அதை நம்பி அதிக தொகையை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.