பிரதமர் மோடியின் 69ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவரின் பிறந்த நாளுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர், முதன் முறையாக தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர், ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார்.