ETV Bharat / bharat

அமைதி,ஒற்றுமை, சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது- பிரதமர் மோடி ட்வீட்!

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தீவினையானது என தனது கவலையை வெளிப்படுத்திய மோடி, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை பேணவேண்டிய நேரமிது என்று அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Dec 16, 2019, 4:47 PM IST

Updated : Dec 16, 2019, 5:21 PM IST

மோடி ட்வீட் பல்கலைக்கழக மாணவர் போராட்டம்  ஜாமிய பல்கலைக்கழக மாணவர் போராட்டம் மோடி ட்வீட்  Modi tweet on jamia millia university students protest  Modi tweet on cab protest  குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான மாணவர்கள் போராட்டம்  cab protest
அமைதி,ஒற்றுமை, சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது- பிரதமர் மோடி

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜாமிய மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பத்தையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்,"குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதுஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது. விவதாதம்,கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் இதுபோன்று பொதுச் சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்துவது நமது நெறிமுறையல்ல. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியாவின் பழமையான நல்லிணக்கம், சகோதரத்துவம், இரக்கம் ஆகியவற்றை விளக்குகிறது.

எனது சக இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கிடமின்றி ஒன்றை நான் உறுதியளிக்கிறேன். இந்தச்சட்டமானது எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது. இந்தச் சட்டம் குறித்து எந்தவொரு இந்திய குடிமகனும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தச்சட்டமானது பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இந்தியாவைத்தவிர வேறு எங்கும் செல்லமுடியாத நிலையில் இங்கு வந்த மக்களுக்கானது.

ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி,நாட்டின் வளர்ச்சி குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் அதிகாரத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பது காலத்தின் தேவை.

நம்மை பிரித்து நமக்குள் பிரச்னைகளை உருவாக்க நினைக்கும் குழுக்களை நாம் அனுமதிக்க முடியாது. அமைதி ஒற்றுமை சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது. அனைவரும் வதந்திகள் மற்றும் பொய்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜாமியா மாணவர்களுக்கு குரல் கொடுத்த பதான்!

Intro:Body:

Modi on CAA protest across India

Conclusion:
Last Updated : Dec 16, 2019, 5:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.