குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வட கிழக்கு பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம், கடந்த இரு நாள்களாக கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் தற்போதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என கெஜ்ரிவால் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”அமைதியும் நல்லிணக்கமும்தான் நமது பெருமை. இதனைக் கருத்தில்கொண்டு டெல்லியிலுள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். மிக விரைவில் டெல்லியில் அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் மீட்டெடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'திட்டமிட்டு நடைபெற்ற டெல்லி கலவரம்; பின்னணியில் பாஜக' - சோனியா குற்றச்சாட்டு