ஜப்பானில் நடந்த ஜி20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி 7 கூட்டம் ஆகியவற்றில் பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்தித்தார். இந்நிலையில் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்.
அப்போது அங்கு நடக்க இருக்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சி (Howdy Modi), ஐ.நா., பொது கூட்டம் ஆகியவற்றில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடிசந்திக்க உள்ளார். இத்தகவலை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் சிறிங்களா தெரிவித்துள்ளார்.