பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி சுவாகக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகாம்பூர் காட்டில் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதால், ஜேட்லியின் இறுதிச் சடங்கிற்க்கு அவர் வரமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.