உலகின் மிக பழமையானது தமிழ் மொழி, இன்றளவும் அமெரிக்கா முழுவதும் தமிழ் மொழி எதிரொலிக்கிறது என மோடி சென்னையில் நேற்று தெரிவித்தார். இந்த கருத்தை திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "சில சமயங்களில் மோடி உண்மையை கூறுகிறார். ஆனால், அவரின் கருத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புரியவில்லை. தமிழ் மொழி பழமையானது என்ற அவரின் கருத்தை தன் அமைச்சரவைக்கும் அரசுக்கும் மோடி புரிய வைக்க வேண்டும்.
பிரதமரின் கருத்திலிருந்து அமித் ஷா வேறுபடுகிறார். தமிழ் மொழிக்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கக்கூடாது" என்றார். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என அமித் ஷா தெரிவித்த கருத்தால் பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.