தேசிய நெடுஞ்சாலை 766இல் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைதான் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. தடையை எதிர்த்து 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராமத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பத்து நாட்களாக போராடிவரும் காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்தவர்களை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போராடிவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் இங்கு வந்துள்ளேன். நாட்டின் மிகப்பெரிய பலமான பொருளாதாரத்தை மோடி அழித்துள்ளார். இதனை அவர் ஏன் செய்தார் என்று பதிலளிக்க வேண்டும். நாட்டில் நிலவும் வேலையின்மை குறித்து அவர் விளக்க வேண்டும். இதுமாதிரியான விவதாங்களில் மோடி ஈடுபட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மோடியை எதிர்த்தவர்களுக்கு தேச துரோக வழக்கு!