ஒடிசா மாநிலம் கோரபூட் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,
"பாலகோட் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை பாகிஸ்தான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் இருப்பிடத்திற்கே சென்று நமது இந்திய விமானப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுள்ளனர். ஆனால் இத்தாக்குதல் சம்பவம் குறித்து சிலர் இன்னும் ஆதாரம் கேட்கின்றனர்.
செயற்கைக்கோள்களை துல்லியமாக தாக்கும் மிஷன் ஷக்தி பரிசோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்தது" எனப் பேசினார்.
முன்னதாக நேற்று உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பேசிய பிரதமர் மோடி, தேசத்திற்கு எதிராக கருத்துகளை கூறி பாகிஸ்தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் கதாநாயகன் ஆவதை மக்கள் மன்னிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.