மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி முதன்முறையாக வாரணாசி தொகுதிக்குச் சென்றார். அங்கு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது,
வாக்கு கணக்குகளை தாண்டி ஒரு பரிந்துணர்வு இருந்துள்ளது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். தொண்டர்களின் பணி அதிசயத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிக்கான முழு புகழும் தொண்டர்களை தான் சேரும். அடிமட்ட அளவிலுள்ள தொண்டர்களின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்றுள்ளனர்.
உத்தரபிரதேசம் இந்தியாவுக்கான பாதையை காண்பித்துள்ளது. இருப்பினும் அரசியல் தீண்டாமை நிலவுவது வருத்தமளிக்கிறது. பாஜகவை இந்தி பேசும் மக்களுக்கான கட்சி என்று அரசியல் வல்லுநர்கள் வரையறுக்கிறார்கள். கர்நாடகாவில் நம்முடைய கட்சி அதிக எம்பிக்களை கொண்டுள்ளது. அதேபோல் கோவாவில் நாம் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறோம்.
வடக்கிழக்கு மாநிலங்கள், லடாக் என அனைத்து பகுதிகளிலும் ஆட்சி செய்கிறோம். வெற்றியும் பெற்றுள்ளோம். இந்த நாட்டுக்கு வேண்டும் என்றால் நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிக்கலாம். ஆனால் உங்களுக்கு நான் ஒரு சேவகன். எனக்கு உங்களுடைய கட்டளைதான் முக்கியம்" என்றார்.