தாய்லாந்தில் நடைபெறும் 16ஆவது ஆசியன் கூட்டமைப்பு மாநாடு, கிழக்காசிய உச்சி மாநாடு, பிராந்திய கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார்.
இரண்டாவது நாளான நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது இந்தியா-ஆசியன் உச்சி மாநாடு நடைபெற்றது. அதையடுத்து மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டு மக்களிடையேயான உறவை மேம்படுத்துதல், இருநாட்டின் வளர்ச்சிக்கும் ஒத்துழைத்தல் உள்ளிட்டவைகள் பற்றிய ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Act East Policy-யின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு விளங்குகிறது' - மோடி