17ஆவது மக்களவைத் தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஆட்சி அமைக்க வருமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள துணை குடியரசு தலைவர் இல்லத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். மோடியை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

காலை உணவுடன் ஆரம்பித்த இந்த சந்திப்பு வலுவான அரசை கட்டமைப்பது குறித்தும், அமைதி மற்றும் வளர்ச்சி மேம்பாடு குறித்தும் பேசியதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
