ETV Bharat / bharat

5 ஆண்டுகால ஆட்சியில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர்! - press

டெல்லி: "தங்களது கட்சி அதிக பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும்" என்று, ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர்
author img

By

Published : May 17, 2019, 5:27 PM IST

17வது மக்களவைத் தேர்தல் ஏழுக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு வாக்கப்பதிவு நடக்க உள்ளன. இத்தோடு தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாஜக தலைமை ஆலுவலகத்தில் பிரதமர் மோடி, அக்கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். கடந்த ஐந்சாண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.

அப்போது பேசிய மோடி, "ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பல சாதனைகளை படைத்துள்ளோம் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஆதரவு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. தேர்தல் பரப்புரையை சிறப்பாக மேற்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த தேர்தல் காலங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெறவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால். ஐ.பி.எல் உள்ளிட்டவை அமைதியாக நடைபெறும். எங்களது கட்சி அதிக பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும்" என்றார்.

கூட்டணி கட்சிகளில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.