காலநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி இன்று ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "உபதேசம் செய்வதைவிட செயலில் இறங்குவது 100 விழுக்காடு சிறந்தது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சுத்தமான எரிவாயு வழங்கியுள்ளோம். குடிநீர் சேமிப்பு, மழைநீர் சேமிப்பு ஆகியவைக்காக ’ஜல் ஜீவன்’ திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடு்க்க இந்தாண்டு நடந்த சுதந்திர தின விழாவில் உறுதி ஏற்றோம். இந்த விழிப்புணர்வு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சினை கைவிட்டு, செயலில் இறங்க காலம் வந்துவிட்டது" என்றார். இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.