ETV Bharat / bharat

என் மீதான குற்றச்சாட்டை மோடியே நீக்கிவிட்டார்... மல்லையா டிவீட்!

தன்னுடைய சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக கூறுவதன் மூலம் தன் மீதிருந்த குற்றச்சாட்டை பிரதமர் மோடியே நீக்கிவிட்டதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா
author img

By

Published : Mar 31, 2019, 11:14 AM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, "வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் உலகின் எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். சமீபத்தில் நீங்கள் மல்லையா வழக்கை பார்த்திருப்பீர்கள். அவர் வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. நாங்கள் இரண்டு மடங்கு பணத்தை எடுத்துக்கொண்டோம். இதனால் அவர் பிரச்னையில் உள்ளார்" என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, லண்டனில் பதுங்கியிருக்கும் விஜய் மல்லையா டிவிட்டரில், "மோடியின் பேட்டியைப் பார்த்தேன். நான் வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டிய நிலையில் என்னுடைய 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வசூலித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மல்லையா டிவீட்
மல்லையா ட்வீட்
பிரதமரே பணத்தை பறிமுதல் செய்துவிட்டதாக கூறிய பின்னும் பாஜக தலைவர்கள் என்னைப் பற்றிப் பேசுவதை மாற்றாதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், "நான் 1992ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் வசித்து வருவதை மறைத்து நான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக பாஜக கூறி வருகிறது. தற்போது, என்னுடைய பணத்தை பறிமுதல் செய்துவிட்டதாக கூறுவதன் மூலம் என் மீதான குற்றச்சாட்டை பிரதமரே நீக்கிவிட்டார்" என்று கூறியுள்ளார்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.