ETV Bharat / bharat

’சுயசார்பு இந்தியா’வை நிறுவ பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உதவும்! - பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் பற்றி அமித் ஷா கருத்து

டெல்லி: சுயசார்பு இந்தியாவை நிறுவுவதற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உதவும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

modi-govts-economic-package-to-go-a-long-way-in-making-india-self-reliant-amit-shah

author img

By

Published : May 18, 2020, 3:22 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு இந்தியா என்ற பெயரில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

அதன்படி, ஒவ்வொரு மாலையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தார். ஐந்தாவது நாளான நேற்று கடைசி பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

அதில், ''ஊரகப்பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குடிபெயர் தொழிலாளர்களுக்கும், ஊரகப் பகுதி மக்களுக்கும் நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்குவதோடு, நாட்டின் உள்கட்டமைப்பை உயர்த்த உதவும். சுயசார்பு இந்தியா திட்டத்தில் இந்த அறிவிப்புகள், இந்தியாவை நீண்ட தூரம் பயணிக்க உதவும்.

சுகாதாரம், கல்வி, தொழில்துறை ஆகிய மூன்று விஷயங்கள் பற்றி எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அதற்காகப் பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நாட்டின் சுகாதாரத்தை வலுப்படுத்தி மறுசீரமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவிதமான பிரச்னைகளையும் இந்தியா சமாளிக்கும் திறன் பெறுவோம். தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா மருத்துவத் துறையில் எதிர்காலத்தில் பெரும் முன்னேற்றமடையும்.

மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் கொள்கைகளை மறுசீரமைத்தல், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், தொழில் தொடங்கும் நடவடிக்கைகளை எளிமையாக்குதல் உள்ளிட்ட முடிவுகள் சுயசார்பு இந்தியாவை நோக்கிய பார்வையாகவே பார்க்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.