ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட தெலங்கானாவைச் சேர்ந்த 19 வயது பெண் குறித்த செய்தி அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இந்தச் சோகமான தருணத்தில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வேண்டுமென்றே பணமதிப்பிழப்பு, நாடு தழுவிய ஊரடங்கு என்று பாஜக அரசு எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது. இதுதான் உண்மை" என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் (எல்.எஸ்.ஆர்) மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த மாணவி ஐஸ்வர்யா நவம்பர் இரண்டாம் தேதி தெலங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத்தின் மோசமான நிதி நிலையை கருத்தில்கொண்டு, தனது கல்வியைத் தொடர்வது குறித்து அவர் கவலைப்பட்டு வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.