மணிப்பூரின் சைத்து, சிங்காத், லிலாங், வாங்ஜுங், வாங்கோய் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ராஜினாமா செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த ஐந்து தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் பிகே சிங் கூறுகையில், '' ஐந்து தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நவ.7ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் தேர்தல் நடக்கவுள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த இடைத்தேர்தலில் மார்க் 3 வகையான விவிபேட் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அக்.20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைமைப் பொருளாதார ஆலோசகரை கேலி செய்த ப.சிதம்பரம்