மலப்புறம் (கேரளா): அடிப்படை தேவைகள் கிடைக்கப்பெறாமல் இருக்கும் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களின் வீடு தேடி நியாய விலை பொருட்களை கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை 206 பழங்குடி மக்கள் வாழும் மலப்புறம் மாவட்டத்திலுள்ள அம்புலாலா, உச்சக்குளம், நெடுங்கயம், முண்டக்கடவு ஆகிய இடங்களில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. இவை மாநிலத்தில் நிகழ்ந்த மழை வெள்ள பாதிப்பினால் பெரும் சேதத்திற்குள்ளான மலைக்கிராமங்கள் ஆகும்.
’காண்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கரோனாவால் அதிக ஆபத்து’ - ஆய்வில் தகவல்!
முந்தைய வெள்ள சேதத்தில் வீடுகளையும் நிலத்தையும் இழந்த கருலாய் கிராம மக்கள் தற்போது வட்டிக்கல்லு, காஞ்சிரக்கடவ், புலிமுண்டா ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்தாண்டு 2020 பெருவெள்ளத்தில் முண்டக்கடவுக்கான அணுகல் சாலை முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், காஞ்சிரக்கடாவ், புலிமுண்டா ஆகிய இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் செல்ல மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய துயர நிலையுள்ளது.
இப்படியாக தங்கள் பொருட்களை வீட்டிற்கு கொண்டு வர வாகன கட்டணமாக 1500 ரூபாய் வரை மக்கள் செலவிடுகின்றனர். மேலும், இந்த தொலைதூர குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் காட்டு விலங்கு தாக்குதல்கள் பயத்தினால், தங்கள் பொருட்களைப் வாங்கச் செல்வதில்லை.
குஜராத் சபர்மதி ரயில் எரிப்பு குற்றவாளிக்கு பிணை!
இந்த சூழலில், ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்குள் தொலைதூர பகுதிகளிலுள்ள ஒவ்வொரு பழங்குடி குடியேற்ற கிராமங்களுக்கும பொது விநியோக உணவு தானியங்களை வழங்கும் நடமாடும் நியாயவிலைக் கடை திட்டம், இங்குள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாகும்.