கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், கர்நாடகா எல்லைக்கு அருகே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் கிராமத்தில் வசிக்கும் தன் உறவினர்களை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில், தன் செல்போன் மூலம் உறவினர்களை அழைத்து முகவரி குறித்து கேட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவருடைய செல்போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில், பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சாலையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்ட கிராம வாசிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செல்போன் வெடித்து நபர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.