இது குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இந்தாண்டு மொபைல் டேட்டா சேவை பயன்பாடு 56 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 46 ஆயிரத்து 404 மில்லியன் ஜிபியாக பயன்பாட்டின் சேவை அதிகரித்திருத்துள்ளது. தனிநபர் ஒருவர் 2014ஆம் ஆண்டு சுமார் 0.27 ஜிபி பயன்படுத்திவந்தனர்.
தற்போது, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் டேட்டா ஜிபி அளவானது பன்மடங்கு உயர்ந்து தோராயமாக 7.6 ஜிபியாக உள்ளது. இதன்மூலம், டேட்டா வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு இந்தியாவில் நான்காம் தலைமுறை அலைக்கற்றை (4ஜி) நெட்வொர்க் வருகையால் மொபைல் டேட்டா பயன்பாட்டு சேவையை அனைத்து நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரு ஜிபிக்கு ரூ.75.57ஆக குறைத்திருந்தது.
2017ஆம் 19.35 ரூபாயாகவும், நடப்பாண்டில் 11.78 ரூபாயாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2017இல் 38 ஆயிரத்து 882 கோடி ரூபாயும் இந்தாண்டில் அந்தத் தொகையை முறியடித்து 54 ஆயிரத்து 671 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளன.