கரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், மிசோரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம்தங்கா பேசுகையில், ''தேவாலயங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டதாலும், மாநில மக்களின் முழுமையான ஒத்துழைப்பாலும் மட்டுமே மிசோரம் மாநிலத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் யாரும் ஊடுருவாத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டாலும், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளை சரிசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்றார்.
இதையும் படிங்க: குடிபெயர்ந்தோரை மேற்குவங்கம் அழைத்துவர 8 ரயில்களுக்கு அனுமதி!