ETV Bharat / bharat

பாஜக பிரமுகரின் உறவினர் வீட்டில் துப்பாக்கி சூடு : சிசிடிவி காட்சிகள் ஆய்வு! - பாஜக பிரமுகரின் உறவினர் வீட்டில் துப்பாக்கி சூடு

ஜெய்ப்பூர் : பாஜக பிரமுகர் நரேந்திரா சூரனா என்பவரின் உறவினர் வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murd
urd
author img

By

Published : Oct 20, 2020, 5:04 PM IST

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் நரேந்திரா சுரனாவின் உறவினர் வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பணம் தராவிட்டால் கொன்று விடுவோம் என்றும் அந்நபர்கள் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து பேசிய பாஜக பிரமுகர் நரேந்திரா சூரனா, ”இதற்கு முன்பே இத்தகயை மிரட்டல்கள் வந்துள்ளன. வாட்ஸ்அப் காலில் ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் அனைவரையும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர். காவல் துறையினர் விரைவாக அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே தகவல் அறிந்ததும் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா இவ்விவகாரம் குறித்து காவல் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.