ETV Bharat / bharat

15 வயது சிறுமி வன்புணர்வு: ராஜஸ்தானில் கொடூரம் - 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு!

ராஜாஸ்தான்: 15 வயது சிறுமி கடத்தப்பட்டு தொடர்ந்து மூன்று நாள்கள் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl raped for three days  raped for 3 consecutive days  rape case in Pindwada police station area  15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு  15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு!  ராஜஸ்தான் பாலியல் வன்புணர்வு
Girl raped for three days
author img

By

Published : Apr 29, 2020, 3:45 PM IST

ராஜாஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டம் பிண்ட்வாரா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்று மூன்று நாள்கள் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதில், சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை வீட்டினருகே விட்டு விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். இது குறித்து பிண்ட்வாரா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர். மேலும், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவர் மீது பாய்ந்தது போக்சோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.