ஹைதராபாத் கரீம் நகர் மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை மூன்று நாள்களாக மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் மைனர் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு பேரும் 20 முதல் 21 வயது உடையவர்கள்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து மூன்று நாள்கள், மூன்று பேரும் அச்சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
பின்னர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின்பேரில், குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்களைத் தேடிவருவதாகக் காவல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அம்மி கல்லால் கொன்ற மகள்!