ETV Bharat / bharat

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு - வனத்துறையினர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

leopard attack
leopard attack
author img

By

Published : Jun 10, 2020, 2:09 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள தோபியான்பூர் கிராமத்தில் கட்டர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே நேற்று இரவு (ஜூன் 8) சிறுத்தை தாக்கியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்ததாக வன அலுவலர் ஜி.பி. சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கட்டர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே சிறுமி தனது வீட்டிற்கு வெளியே இருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. அதன்பின் சிறுமியைப் பிடித்த சிறுத்தை, அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்ல முயன்றதைத் தொடர்ந்து, கிராமவாசிகள் கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர், சிறுத்தை சிறுமியை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடியது. இதற்கிடையே, சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.