பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி உறவினர் வீட்டிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஐந்து பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர் அச்சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு, அனைவரும் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தர்பங்கா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து வெளியிட்ட வீடியோவில் இருந்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: நால்வருக்கு வலைவீச்சு!