ETV Bharat / bharat

உ.பி.யில் பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு! - தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு

லக்னோ: அம்பேத்கர் நகரில் பட்டியலின சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

Minor Dalit girl raped
Minor Dalit girl raped
author img

By

Published : Nov 30, 2020, 7:00 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பட்டியலின சிறுமி ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்த தப்பிய சிறுமி, இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

உடனே உறவினர்கள் அப்பகுதி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அந்தச் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறுமி வன்கொடுமை வழக்கில் சிக்கிய செய்தியாளர்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.