உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, தனது பதினோறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக புகைப்படம் எடுக்கச் சென்றதையறிந்த பக்கத்து வீட்டு இளைஞர்கள் நான்கு பேர் சிறுமியை பின் தொடர்ந்துள்ளனர்.
அப்போது, சிறுமியை வழிமறித்து கம்பியால் தாக்கி கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும், கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாகப் பதிவு செய்து சிறுமியை மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்து அவரின் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.