இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈராக்கில் பதற்றமான சூழல் நிலவிவருவதால் இந்தியர்கள் யாரும் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஈராக்கில் வசித்துவரும் இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாம். தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பாக்தாத், எர்பில் பகுதிகளில் அமைந்துள்ள இந்தியத் தூதரகங்கள் வழக்கம்போல் செயல்படும். ஈரான் வாழ் இந்தியர்கள் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் அணுகி உதவிபெறலாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈராக், ஈரான், வளைகுடா வான்வழியாகப் பறக்க வேண்டாம் என இந்திய விமான நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்குப் பதிலடி தரும்விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது.
இதன் காரணமாக, ஈராக், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் உச்சகட்ட பதற்றம் நிலவிவருகிறது சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : "எல்லாம் நலம்தான்" - ட்ரம்ப் ட்வீட்