காலநிலை மாற்றம், வறுமை உள்ளிட்ட்ட பிரச்னைகள் உலகில் தலைவிரித்தாடுகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி ஸ்விட்சர்லாந்திலுள்ள லூசெர்ன் பல்கலைக்கழகம் இப்பிரச்னைகள் தொடர்பான பாடப்பிரிவை உருவாக்கியுள்ளது.
இந்தப் பாடப்பிரிவில் சேர்வதற்காக அனைத்து நாட்டு மாணவர்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்திய கல்வி அமைச்சகத்திடமும் யுனெஸ்கோவிடமும் இதில் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
முனைவர் பட்டம் பெற்றவர்களும் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பாடப்பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 22ஆம் தேதி.