பொருளாதாரம் மந்தநிலையில் இருந்திருந்தால், எப்படி ஒரே நாளில் மூன்று படங்கள் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் ஒரு துறையை ஒப்பிட்டு பேசியிருப்பது பொருளாதார நிபுணர்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தன் கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையாக அவர் அறிக்கை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திரைப்படம் குறித்த என் கருத்து சரியான கருத்தே. திரைப்படத்துறையின் தலைநகரம் மும்பை என்பதால் இந்த கருத்தை வெளியிட்டேன். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திரைப்படத்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன். இதனால் நமக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. பொருளாதாரத்தை சீர்திருத்த பல மக்கள் நலத்திட்டங்களை மோடி அரசு எடுத்துள்ளது.
நான் பேசிய முழு வீடியோ சமூக வலைத்தளத்தில் உள்ளது. ஆனால், ஒரு சிலவற்றை மட்டும் சிலர் தவறாகப் பரப்பிவருகின்றனர். நான் என் கருத்தை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.