ETV Bharat / bharat

அமைச்சர் கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கோரிக்கை

புதுச்சேரி: அவதூறு பரப்பும் அமைச்சர் கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் கந்தசாமி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும புதுச்சேரிபாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Sep 10, 2020, 3:33 PM IST

அவதூறு பரப்பும் அமைச்சர் கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று அமைச்சர் கந்தசாமி ஓர் விழாவில் பேசிய போது அதில் புதுச்சேரி மாநிலத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது என்று ஒரு புதிய புரளியை கிளப்பிவிடுகிறார்.

எப்போதெல்லாம் காங்கிரஸ் அரசு தன் கையாலாகாதனத்தை மறைக்க நினைக்கிறதோ அப்போதெல்லாம் இது போல ஒரு புரட்டு செய்தியை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதை ஆண்டாண்டு காலமாக வாடிக்கையாகச் செய்துவருகிறது.

எந்த முகாந்திரமும் இல்லாமல் புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பலனடைய நினைக்கும் அமைச்சர் கந்தசாமியின் இந்த பொறுப்பற்ற பேச்சு குறித்து, சட்டப்படி ரகசிய காப்பு பிரமாணம் எடுத்த ஒரு மாநில அமைச்சர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசி வருவதால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சகத்திற்கு பாஜக சார்பாக கடும் கண்டனத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு புதுச்சேரி மாநிலத்தை பக்கத்து மாநிலத்துடன் சேர்க்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. மாறாக விரைவில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை விரட்டிவிட்டு நேர்மையான, நிர்வாகத் திறன்மிக்க, நாட்டு நலன் காக்கும், மோடி அவர்களின் ‌பாஜக ஆட்சியை புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கவேண்டும் என்ற எண்ணம்தான் மக்களிடம் உள்ளது.

மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திட்டமிடும் அமைச்சர் கந்தசாமி பொறுப்பற்ற சதிச் செயலுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.