ஜம்மு - காஷ்மீரின் நக்ரோடா பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே சோதனை செய்வதற்காக ஸ்ரீநகர் செல்லும் லாரி ஒன்றை அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த லாரியில் இருந்த பயங்கரவாதிகள், காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார். பின்னர், காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், பயங்கரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்தார். இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, அதில் மூவர் கொல்லப்பட்டதாகவும் மேலும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தலைவர் முகேஷ்சிங் தெரிவித்தார்.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல்; 6 குண்டுகளைத் தலையில் வாங்கி வீரர் உயிரிழப்பு