ஜம்மு காஷ்மீர் யூனியனில் இன்று காலை 11.51 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 3.0 என பதிவாகியிருந்தது.
இந்த அதிர்வு பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, அப்பகுதி மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 184 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது நினைவுக் கூரத்தக்கது.