தமிழ்நாடு- கேரள மாநில எல்லைப் பகுதிகளான இடுக்கி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நீலப் புலி (ப்ளூ டைகர்) வண்ணத்துப் பூச்சிகள் பெருமளவு காணப்படுகிறது.
இந்த வண்ணத்துப் பூச்சிகள் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாக தாழ்வான பகுதிகளிலிருந்து உயர்ந்த மலைப் பகுதி நோக்கி இடம்பெயரும். அதற்கு தற்போது நிலவும் வெப்ப காலநிலையும் ஒரு காரணம்.
இதற்கிடையில் நீலப்புலி வண்ணத்துப் பூச்சிகள், குளிர்ந்த காலநிலையை தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் சிறகடிக்க தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வயநாட்டிற்கு வந்தடையும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் இடம்பெயர்ந்து விடுகின்றன.
பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீலப் புலி வண்ணத்துப் பூச்சிகள், மலையாளத்தில் நீலக் கடுவா மற்றும் அராலி ஷலபம் உள்ளிட்ட பெயர்களில் அறியப்படுகின்றன.
இவைகள் தவிர 46 வகையான பிற வண்ணத்துப் பூச்சிகளும் இடம்பெயர்கின்றன.
அதில் நீலப் புலி வண்ணத்துப் பூச்சி சிறப்பு வாய்ந்தது. இந்த வண்ணத்துப் பூச்சிகளால் பல கிலோ மீட்டர் வரை இடம்பெயரவும் முடியும். இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த வண்ணத்துப் பூச்சிகள் குறித்து வயநாட்டில் ஃபெர்ன்ஸ் நேச்சுரலிஸ்ட் சொசைட்டி தலைமையில் ஆய்வு நடத்தப்படுகிறது.