இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில், பலகட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், உழைப்பை நம்பி இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். போதியப் பண வசதியில்லாமல், ஏராளமானோர் நடந்தே செல்கின்றனர். பணப் பற்றாக்குறை அவர்களை நிர்கதியாக்கியது, இயலாமையின் உச்சம்.
இதனிடையே, டெல்லி, உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் கூடும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பேருந்து (அ) ரயிலில் பயணம் மேற்கொள்ள காவல் துறையினர் அறிவுறுத்திவருகின்றனர். ஆனால், அவர்களுக்குப் போதியப் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து இடம்பெயர் தொழிலாளர் ஒருவர் கூறும்போது, 'நான் உத்தரப் பிரதேசத்திலிருக்கும் ஹார்டோய் மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து காத்துக் கிடக்கிறேன். அரசு போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யவில்லையெனில் நடந்தே சென்றுவிடுவேன்’ என்றார், வேதனையுடன்.
முன்னதாக காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) பிவி ராமசாஸ்திரி, 'சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகப் புறப்படும் தொழிலாளர்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: 'சொந்த ஊருக்குப் போயே ஆகணும்' - உரிய அனுமதியின்றி உ.பி. எல்லையில் கூடிய இடம்பெயர் தொழிலாளர்கள்!