மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மசோதா 2017ஆம் ஆண்டு மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. இந்நிலையில், மீண்டும் ஆட்சியமைத்த மோடி அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மசோதாவை மறுபடியும் மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகும் பட்சத்தில் வாகனங்கள் ஓட்டும் விதியில் அதிகமான மாற்றங்கள் நிகழ உள்ளன. அவற்றில் வாகனங்கள் ஓட்டுவதில் விதியை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படும்.
அதுமட்டுமின்றி உதிரி பாகங்கள் அனைத்திலும் தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள் சிறிய அளவிலாவது கட்டாயம் இருக்க வேண்டும் என அந்தச் சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.