நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக்கோரி கருணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு நிராகரித்து, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி இருந்தது.
இதையைடுத்து, கருணை மனுவை நிராகரிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்நிலையில், முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, கருணை மனு நிலுவையில் உள்ளதால், அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், தூக்கிலிடும் தேதியை அவர் ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் ஆட்டோவில் கூந்தலைத் திருடிய 'கார்குழல் காதலன்'