ETV Bharat / bharat

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு! - ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு!

டெல்லி: தெலங்கானா, ஆந்திரப் பிரேதசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை தொடர்பான நிலைமையைக் கண்காணித்துவருவதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு!

author img

By

Published : Oct 15, 2020, 7:25 AM IST

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு பழைய கட்டடமும் இரண்டு கூரைகளும் இடிந்து விழுந்தன. ஹைதராபாத்தில் வீடுகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது.

ஹைதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 15 பேர் உயிரிழந்த நிலையில், தெலங்கானாவில் இதுவரை 32 பேர் மழையால் உயிரிழந்தனர். ராணுவமும் பேரிடர் மீட்புப் படையினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துவருகின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருத்துவ வசதிகளை அளித்துவருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, “பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா, ஆந்திராவை உள் துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்துவருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த இரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து தேவைகளையும் மத்திய அரசு செய்துவருகிறது” எனப் பதிவிட்டார்.

  • MHA is closely monitoring the situation in Telangana and Andhra Pradesh in the wake of heavy rainfalls. Modi government is committed to provide all possible assistance to the people of both the states in this hour of need. My thoughts and prayers are with those affected.

    — Amit Shah (@AmitShah) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தின் சில பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது என்றார்.

இதையும் படிங்க...நதிகள், ஊர்களுக்கு எல்லாம் பெண்கள் பெயர்... இந்தியாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: தீர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.