ETV Bharat / bharat

ஊரடங்கு மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம் - கோவா முதலமைச்சர் - நீட்டிக்கப்படும் ஊரடங்கு

பனாஜி: ஊரடங்கு மேலும் 15 நாள்கள் நீட்டிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Goa CM
Goa CM
author img

By

Published : May 29, 2020, 10:20 PM IST

நாடு முழுவதும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு குறித்தும் வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசி வாயிலாக கருத்துகளைக் கேட்டுவருகிறார்.

கோவாவில் சுற்றுலாத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "உணவகங்கள், மால்கள், ஜிம்கள் ஆகியவை தகுந்த இடைவெளியைப் பின்பற்றி இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

உள்துறை அமைச்சகத்திடம் இதற்கான அனுமதியைக் கோரியுள்ளோம். இது குறித்த அறிவிப்பும் வழிமுறைகள் உள்துறை அமைச்சகத்தால் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

அமித் ஷாவுடன் நேற்று (மே 28) தொலைபேசி வழியாக உரையாடினேன். தற்போதுள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். கரோனா பரவலும் அதிகரித்துவருவதால் ஊரடங்கை நீட்டித்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.

கோவாவில் இதுவரை பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநில எல்லைகளைத் திறக்க வேண்டாம் - சத்தீஸ்கர் முதலமைச்சர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.