ETV Bharat / bharat

திரிணாமுல் காங்., உறுப்பினர்கள் மருத்துவமனைக்கோ, மயானத்திற்கோ செல்வது உறுதி- பாஜக தலைவர்

author img

By

Published : Nov 9, 2020, 10:57 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இன்னும் ஆறு மாதத்தில் தங்களது கை, கால்களை இழந்து மருத்துவமனைக்கோ அல்லது இடுகாட்டிற்கோ செல்வர் என அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.

Mend your ways or will have to go to crematorium: Dilip Ghosh to TMC cadres

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மக்கள் பாஜக-விற்கு அதிகாரத்தை அளித்தால் மாநிலத்தில் ஜனநாயகம் மீட்கப்படும். மத்திய அரசு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைகளை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் மேற்கொள்ளும்.

மத்திய அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் என உறுதியளிக்கிறேன். ஜனநாயக உரிமைகளை எவ்வித அச்சமும் இன்றி மக்கள் பெறுவதற்கான வழிகளையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தரும். தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆட்சியின் கடைசி காலத்தை எண்ணி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், சாதாரண மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதற்கான பதிலடியை அவர்கள் இன்னும் ஆறு மாதத்தில் அனுபவிப்பார்கள். அவர்கள் இன்னும் ஆறு மாதத்தில் தங்களது கை, கால்களை இழந்து மருத்துவமனைக்கு செல்வார்கள். மீண்டும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை எனில் அவர்கள் இடுகாட்டிற்கு செல்வது உறுதியாகும்" என்றார்.

இவரது கருத்துகளுக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி. சௌகாதா ராய், " இதுபோன்ற அச்சுறுத்தும் வார்த்தைகள் மூலம் பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்துவிடுகிறது. மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை அளிக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்' - டிஜிட்டல் பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.