உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய அவர்,
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களியுங்கள். அப்படி வாக்களிக்காவிட்டால், என்னால் உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது எனப் பேசினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இது மிகவும் முக்கியமானது. உங்களின் அன்பினாலும், மக்களின் ஆதரவினாலும் நான் ஏற்கனவே வென்று விட்டேன். ஆனால், இஸ்லாமியர்கள் இல்லாமல் வெற்றி பெற்றால், அதை நன்றாக உணர முடியாது. ஒரு இஸ்லாமியர் எனக்காக பணி புரிந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறேன். நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் மகன்கள் இல்லை.
நான் உங்களிடம் எந்த பிரிவினையையும் பார்க்கவில்லை. உங்களின் வலியையும், சோகத்தையும், அன்பையும் மட்டும்தான் நான் பார்க்கிறேன். இந்த தேர்தல் உங்களுக்கானது எனப் பேசினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தி, இந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் களம் காண்கிறார். பிலிப்பிட்டில் அவரது மகனான வருண் காந்தி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.