ETV Bharat / bharat

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்கள் - வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவிப்பு! - இயற்கை உபாதை கழிக்கச் சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்

இயற்கை உபாதை கழிக்க ஆற்றுக்குள் சென்ற இரு இளைஞர்கள், காட்டாற்று வெள்ளத்தின் நடுவே மாட்டிக்கொண்ட சம்பவம் கர்நாடாக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Men went to nature call Stuck between the water
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு
author img

By

Published : Oct 11, 2020, 7:43 PM IST

பெங்களூரு: இயற்கை உபாதை கழிக்க ஆற்றுக்குள் சென்ற இரு இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் முஷ்கி பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடாக மாநிலம் முஷ்கி நிலா அணைப்பகுதியில் அதிகளவு கனமழை பெய்ததால், இன்று அதிகாலை அந்த அணையிலிருந்து 200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்பின்பு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு காலை எட்டு மணியளவில் சீராக உயர்ந்து 1600 கன அடியை எட்டியுள்ளது.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

இதனிடையே சென்னபஷ்வா, ஜெலாலீலா என்ற இரு இளைஞர்கள் அதிகாலையில், இயற்கை உபாதை கழிக்க ஆற்றுக்குள் சென்றுள்ளனர். அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் நீரின் மட்டம் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில், அச்சமடைந்த அவர்கள் இருவரும் ஆற்றின் நடுவே இருந்த மேடான பகுதிக்குச் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு அலுவலர்கள் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினப் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு - இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.