ETV Bharat / bharat

ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்தியர் ஹிலால் அகமது ரத்தேர்

author img

By

Published : Jul 30, 2020, 2:15 PM IST

ஜம்மு காஷ்மீர்: ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் பெற்றுள்ளார்.

Hilal Ahmed
Hilal Ahmed

முதல் ஐந்து ரபேல் போர் விமானங்கள் நேற்று (ஜூலை 30) இந்தியா வந்தடைந்தன. இந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் பெற்றுள்ளார். சுமார் 7 ஆயிரம் கி.மீ வான்வழி பயணத்துக்குப்பின் இந்தியாவின் அம்பாலா பகுதியில் ரபேல் விமானத்தை தரையிறக்கிய நபர்தான் இந்த விங்க் கமாண்டர் ஹிலால்.

ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவரின் தந்தை முகம்மது அப்துல்லா ரதர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களில் ஹிலாலின் தந்தையும் ஒருவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் முடித்த ஹிலால், 1988ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் போர் விமானி ஆனார்.

MiG 21s, Mirage-2000, Kiran உள்ளிட்ட போர் விமானங்களை எந்த வித விபத்துமின்றி வெற்றிகரமாக இயக்கத் தெரிந்தவர் ஹிலால். இதையடுத்து, இவர் ரபேல் விமானங்களை இந்தியா கொண்டுவருவதற்காகவே பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டார். கடந்த 27ஆம் தேதி விமானத்துடன் பிரான்ஸிலிருந்து புறப்பட்ட ஹிலால் இரண்டு நாட்கள் பயனத்திற்குப்பின் இந்தியா வந்தடைந்தார்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.