2009ஆம் ஆண்டில் தெஹல்கா ஊடகத்திற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர். கவி, கிருஷ்ணா முராரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், "நீதிமன்ற வழக்கு அதன் நடவடிக்கைகள், நீதிமன்ற விவகாரங்கள் குறித்து, ஊடகங்கள் தற்போது பொறுப்பில்லாமல் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றன.
இது ஆரோக்கியமில்லாத செயல்பாடு. இதன் மூலம் நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் தவறான கருத்துருவாக்கங்கள் நீதித்துறை, அதன் அமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்" எனக் கவலைத் தெரிவித்துள்ளார்.
காவல் துறை ஆவணங்களை வைத்துக்கொண்டு பிணை தொடர்பான விசாரணைகளில் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துகளையும், ரஃபேல் வழக்கில் ஊடகங்களின் செயல்பாடுகளை உதாரணம் காட்டி தனது வாதத்தை வேணுகோபால் முன்வைத்தார்.
வாதத்திற்குப் பின் வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு அமர்வு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஒப்புதலின்றி தகனம் செய்தார்கள் - ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வாக்குமூலம்