உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அரசு காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 57 சிறுமிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஐந்து சிறுமிகள் கருவுற்றிருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை மூடி மறைக்காமல் உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கான்பூர் அரசு காப்பக சிறுமிகள் அரசு மூடி மறைக்க முயலாமல், உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உத்தரப் பிரதேச அரசு, பெண்கள் பாதுகாப்பில் அக்கறையற்றும் பொறுப்பற்றும் செயல்படுவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!